Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


டவர் நாடக அரங்கப் பாடசாலை மூலம் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியினை முடித்த மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடமாகாண பிரமசெயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக்நிரஞ்சன், வாழ்நாள் பேராசிரியர் சன்முகதாஸ், தெல்லிப்பளை தேவஸ்தான அறங்காவலர் கலாநிதி ஆறு.திருமுருகன், டவர் மண்டப பணிப்பாளர் நாயகம் டி.எம்.எஸ்.திசாநாயக்க, டவர் மண்டப பிரதிப் பணிப்பாளர் சன்முகசர்மா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், டிப்ளோமா பாடநெறியினை வெற்றிகரமாக முடித்த 44 மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

மேலும் 4 மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை தொடர்வதற்கான சிறு உதவித் தொகையும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது டவர் நாடகப் பாடசாலை ஆலோசணைக்கழு உறுப்பினர்கள் நாடக பாடநெறி விரிவுரையாளர்கள்  டிப்ளோமாதாரர்கள் பெற்றோர்கள் மற்றும் நாடகப் பாடசாலை மாணவர் குழு  உட்பட பலர் கலந்துகொண்டனர்.














No comments