Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சி உள்ளிட்ட 12 நகரங்களில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை


நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்தோடு, 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments