Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். நாமலின் பெயரில் மோசடி - வீடியோ இணைப்பு


பொதுஜன பெரமுன கட்சியின் பெயர் மற்றும் நாமல் ராஜபக்சேவின் பெயரை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் பண மோசடிகள் , சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று இருந்தால் தம்மிடமோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ முறைப்பாடுகளை செய்யுமாறு பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை மற்றும் கட்சியின் பெயரை பயன்படுத்தி காணி பிரச்சனைகள் , பண கொடுக்கல் வாங்கல், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக மோசடியில் ஈடுபட்டமை ,  கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என எமக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று நாங்கள் விசாரித்து இருந்தோம். அப்படி ஒரு வீட்டுக்கு சென்றது சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு நான் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன்.

கட்சியின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். அப்படி ஏதாவது உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றோம். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கின்றது.

நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர்.

 இது தொடர்பாக என்னையும் சில தொடர்பு கொண்டு,  நாமல் ராஜபக்சே தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர். நான் அப்படி எதுவும் இல்லை என அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

இப்படியானவர்களை மக்களாகிய நீங்கள் நம்ப வேண்டாம். எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குற்றச் செயல்களை செய்கின்றவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.  


No comments