Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

14 வயது சிறுவனிடம் 30 லட்சம் ரூபா மோசடி - சந்தேகநபர்கள் கைது


களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த மாணவன் தனது தந்தை  வழங்கிய கையடக்க தொலைபேசியை தொலைத்துள்ளார்.

இந் நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார்.

அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் அவர் கூறியுள்ளார்.

இதன்படி குறித்த மாணவன் தனது வீட்டின் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேக நபருக்கு, மூன்று தடவைகள் கொண்டு வந்து கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபர் அவற்றை இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

மேலும் மாணவருக்கு ட்ரோன் கேமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும் விற்கப்பட்ட மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை விசாரணைகளின் பின்னர் பொலிஸார் மீட்டுள்ளனர். 

No comments