போர் காலத்தில் அழிக்கப்பட்ட வெளிச்ச வீட்டை மீள அமைத்து தருமாறு குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய போதே அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1990 ஆம் ஆண்டு போர்க்காலத்தில் இந்தப் பகுதியிலிருந்த வெளிச்சவீடு அழிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த 34 வருட காலமாக அதனை மறுசீரமைக்க வில்லை. அதனால் கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் கரை திரும்புவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதனால் வெளிச்ச வீட்டினை மறுசீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இறங்கு துறை பகுதியையும் பிரதான வீதியையும் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments