Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல் கொள்வனவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நியமங்களை நிர்ணயிப்பதற்கான கலந்தாய்வு


வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தொழில் நுட்ப பிரிவின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ்மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில்  நெல் கொள்வனவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நியமங்களை நிர்ணயிப்பதற்கான கலந்தாய்வு என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்குமாகாணத்தில் பெரும்போக நெல் கொள்வனவில் ஈடுபடும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள்,விவசாய கூட்டுறவு சங்கங்கள்,கூட்டுறவு அபிவிருத்தி் உத்தியோகத்தர்கள்,கூட்டுறவு உதவி ஆணையாளர்களது பங்கேற்புடன் இடம் பெற்றது .

இந்த கலத்துரையாடலுக்கு வளவாளராக கலந்து கொண்ட விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதிப்பணிப்பாளர் ரா.சஞ்சீவன் கருத்து தெரிவிக்கையில்,

 சிவப்பு அரிசிக்கான தட்டுபாடு செயற்கையாய் உருவாகுவதை தடுப்பதற்கும் சிறு குறு நில விவசாயிகளுக்கு நன்மைமை பயக்கும் நோக்கோடும் கூட்டுறவு சங்கங்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுதலை வரவேற்க வேண்டும் .

எனினும் வடக்கில் அதிகளவாக காணப்பட்ட நெல் நோய் தாக்கத்தாலும் சீரற்ற கால நிலையாலும் நெல்லின் தரம் சற்று பாதிப்படைந்து காணப்படுகிறது .பொதுவாக அறுவடைக்கு முற்றிய நெல்லின் ஈரப்பதன் 30% குறைவாக காணப்பட வேண்டும் , களஞ்சியபடுத்தும் போது அதன் ஈரப்பதன் 13% குறைவாக காணப்பட வேண்டும், நெல்லின் இனத்தூய்மை 98% அதிகமாக காணப்பட வேண்டும் 

 மேலும் கூட்டுறவு சங்கங்களிடம் அதிகளவான களஞ்சியங்களை சரியான பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் அவற்றை சரியான நியமங்களுக்கேற்ப பராமரித்தால் களஞ்சியத்தில் ஏற்படும் அறுவடைக்கு பிந்திய இழப்புகளை குறைக்க முடியும் என தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் , 

வங்கியின் முழு பங்களிப்பால் விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்க ஆலையின் உலர்த்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டுள்ளதாகவும் சங்கங்கள் ஈர நெல்லை கொள்வனவு செய்து உலர்த்தி மூலம் உலர்த்த  முடியும் எனவும் தெரிவித்தார்

இறுதியாக வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி் வங்கியின் செயலாளர் செல்வரட்ணம் வேதவல்லி தெரிவிக்கையில்,

 எமது வங்கியின் தலைவர் எமக்கு அடிக்கடி தெரிவிப்பது போல் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி மத்தியில் அரிசியானது எமது உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானதொன்றாகும் . 

அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது. 

இந்த பின்னனியில் தான் கூட்டுறவு முக்கியமான சமூக நிறுவனமாக உள்ளது. கூட்டுறவால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விஸ்திரப்டுத்துவதுடன் உணவு பாதுகாப்பிற்காக உணவு விநியோகம் செய்யும் பொது நிறுவனமாகவும் தொழிற்படும். கூட்டுறவால் அரிசியின் விலையை சந்தையில் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறமுடியும்.

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி வரப்புயர கடன் மூலம் விவசாயிகளுடன் தொடர்பில் உள்ளது. 6 வருடத்திற்கு முதல் செய்த வடக்கு கூட்டுறவுகளின் அரிசி ஆலைகள் தொடர்பான ஆய்வு இங்குள்ள 16 கூட்டுறவுகளின் அரிசி ஆலைகளும் முழு திறனில் இயங்குமானல் 10,000 மெற்றிக் தொன் நெல் அடிக்கலாம்.

அரசாங்கம் தேசிய உற்பத்தியில் 10% கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் கூட்டுறவும் இந்த பாதையில் இணைந்து நெல் கொள்வனவில் ஈடுபடவேண்டும் என மேலும் தெரிவித்தார். 

No comments