Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈழத்தமிழரங்கின் பிதாமகர் குழந்தை ம. சண்முகலிங்கத்திற்கு அஞ்சலி.


ஈழத்தமிழரங்கினை  அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம்  இழந்து நின்கின்றது என புத்தாக்க அரங்க இயக்க நிர்வாக பணிப்பாளர் எஸ் . ரி குமரன் தனது இரங்கல் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

ஈழத்தமிழரங்கினை  அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம்  இழந்து நின்கின்றது. தன் வாழ் நாள் முழுமையும் அரங்கிற்காக அர்ப்பனிப்புடன் வாழ்ந்தவர்.

தன்னை முனைப்புறுத்தாது தன் சக பயணிகளையும் இளைய தலைமுறையினரை உற்சகப்படுத்தி அவர்களது இயங்கியலில் புளகாங்கிதமடைந்த உயரிய மனிதரது  இழப்பினை மனம் ஏற்க மறுக்கின்றது.

சுய ஒழுக்கம் மன ஓர்மம்  கொண்ட மகத்தான மனிதராக வாழ்ந்து தனது வாழ்வினை நிறைவு செய்துள்ளார். இடர் நிறைந்த வாழ்வியலுக்குள் வாழ்ந்த போதிலும் எதற்கும் தயங்காது சமூகம் சார்ந்த படைப்புக்களை படைத்தர்.

வாழ்வியலை இளைய தலைமுறயினருக்கு முன்னுதாரணமாக்கிய மகத்தான கலைஞனை இழந்து தேசம் கலங்கி நிற்கின்ற வேளையில் புத்தாக்க அரங்க இயக்கம் அவருக்கான அஞ்சலியினை வலியுடன் பதிவு செய்கின்றது.

ஈழத்தமிரழரங்கில் நடிகர் நெறியாளர் ஆய்வாளர் போதனாசிரியர்  அரங்க உருவாக்கங்ளின் முன்னோடியாவார். தனது நாடக பிரதியாக்கத்தின் மூலம் பல புதுமைகளை புகுத்தியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நாடகத்துறை சார்ந்த வகையில் அவரது அனுபவங்கள்  மிகப்பெரும் பொக்கிசங்கள் ஆகும். சமூகத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை உள்வாங்கி தனக்குரிய நகைச்சுவைப்பாங்குடன்   படைப்புக்களை    படைத்தவர்.

தூரசிந்தனைகளையும் இவரால் படைக்கப்பட்ட நாடகங்கள்  காலத்தை வென்று நிற்கின்ற படைப்புக்களாக விளங்குகின்றன.

சிறுவர் நாடகங்களின் மூலம் சிறுவர்களை புத்தாக்குனர்களாக உருவாக்க வேண்டும் என நாடகங்களை படைத்தவர். புத்தாக்க அரங்க இயக்கத்தின் செயற்பாடுகளை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து மகிழ்வடைந்தவர்.

நாம் அவரை சந்திக்கின்ற போது நாடக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை மிழ்ச்சி தருவதாகும் புத்தாக்க அரங்க இயக்கம் சிறந்த முறையில் இயங்கி வருவதை அறிந்து மகிழ்ச்சி யடைவதாக குறிப்பிட்டதுடன் தொடர்ந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு எம்மை ஆசிர்வசித்த. உன்னத மனிதரை இழந்து நின்கின்ற போது மனம்  துயர்கொள்கின்றது.

புத்தாக்க அரங்க இயக்கத்தினர் ஈழத்தமிழரங்கின் பிதாமகர் என வர்னித்து கௌரவித்திருந்தோம். இது பற்றி சந்தித்து குறிப்பிட்ட போது தனக்குரிய புன்னகையுடன் எதிர் கொண்டவர்.

இவரது இழப்பு அரங்கத்துறையில் மிகப்பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்தித்து கொள்வதுடன் அஞ்சலியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments