Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, July 22

Pages

Breaking News

யாழில். இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மூன்றாவது தடவையாக பெயர் மாற்றம்


இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 

 இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு " "திருவள்ளுவர் கலாசார மையம்"  என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர். 

  "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" என்ற பெயர் மாற்றப்பட்டு, "திருவள்ளுவர் கலாசார மையம்"  என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் , கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த கட்டடத்தில், " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை  பொருத்தப்பட்டுள்ளது.