Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திரை விலகிய பின்னரே மண்டபத்திற்கு பெயர் மாற்றப்பட்ட விடயம் எனக்கு தெரியும்




யாழ். கலாச்சார மையத்தைத் திருவள்ளுவர் கலாச்சார மையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட விடயம் எனக்கு தெரியாது. நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வேளை பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின் போது தான் அவதானித்தேன் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் , கந்தர்மடப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ். கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்து கொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின் போது தான் அவதானித்தேன்.

திருவள்ளுவர் கலாச்சார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல்  திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமையும் கவலை தரும்  விடயமும் கூட.

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிலவேளை தெரியாமல் சில தவறுகள் இடம் பெற்று இருக்கக்கூடும். இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் 

கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

No comments