காலியில் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு வேளை மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
காலி, பனங்கல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 ரக துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மூவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments