Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . பல்கலை மாணவர்களின் திருவெம்பாவைப் பாராயணம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றைய தினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. 

பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக யாழ்பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து தபாற்பெட்டிச் சந்தி ஊடாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ்பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. 

மேற்படி பாராயணத்தில் யாழ் இந்து மன்ற பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி.ரமணராஜா , கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒவ்வொருநாளும் திருவெம்பாவை பாராயணம் இடம்பெற்று இறுதி நாள் யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா முன்றலில் இருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் , திருநெல்வேலி சந்தி , பரமேஸ்வரா சந்தி ஊடாக மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தினை வந்தடையும் .

மேலும் திருவெம்பாவை விரத நாளினை முன்னிட்டு கடந்த 2022 ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கபட்ட மார்கழி விழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது





No comments