கால மாற்றத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதன் ஊடாகவே எம்மை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப வடக்கு மாகாண பல் மருத்துவர்கள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்
வடக்கு மாகாண பல் மருத்துவர்கள் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் திண்ணை விடுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,
'பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காகப் பணியாற்றுகின்றோம் என்ற உணர்வு அனைவரிடமும் இருக்கவேண்டும். இன்று அந்த உணர்வு மங்கிச் செல்கின்றமை வேதனையானது. மக்களுக்கு பணியாற்றுபவர்களில் பலர் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் பின்னடிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும்.
பல் மருத்துவ சங்கத்தினர், தமது தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். இவ்வாறான கலந்துரையாடல்கள் ஊடாக எம்மை மேம்படுத்துவதன் ஊடாக எமது மக்களுக்குச் சேiவாயாற்றவேண்டும்' என மேலும் தெரிவித்தார்.
No comments