புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசர் சனசமூக நிலைய பாதுகாப்பு கண்காணிப்புக் கமராக்களை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியில் அமைந்துள்ளது புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசர் சனசமூக நிலையம். சனசமூக நிலைய பாதுகாப்பு கருதி கடந்த வாரம் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராக்களையே விசமிகள் உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
இதனிடையே சனசமூக நிலைய கண்காணிப்புக் கமராக்கள் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் சுன்னாகம் பிரதேசசபையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரும் பிரதேச சபையினரும் முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என சனசமூக நிலைய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சனசமூக நிலையித்தில் வைக்கப்பட்ட புதினப்பத்திரிகைகள் உள்ளிட்டவை திருடப்பட்ட நிலையில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையிலையே அதனை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.







No comments