Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, July 20

Pages

Breaking News

வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்


வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.