Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் - வடக்கு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வு


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடர்பில் வடமாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வு இன்றை தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 வடமாகாணத்தின் திணைக்களங்கள் ,சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் ,அரச அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் , பேராசிரியர்கள் என பல தரப்பினரும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவபடுத்தி தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதன் பொழுது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால்,ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க , ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நிலாந் சப்புமனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை நாடு பூராகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மின்சார கட்டணம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.









No comments