அம்பாறை, எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை பெண்ணொருவர் முன்னாள் கணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
https://chat.whatsapp.com/ H2g8RmUpm8xDqiZJH11jfN
உயிரிழந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று, சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பி மறுமணம் செய்து இருந்தார்.
குறித்த பெண்ணிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்ட கணவன் நேற்றைய தினம் அந்தப் பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலாளியான உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments