கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையில், சுமார் 400 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம், பரந்தன் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 182 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 400 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments