Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி - கொழும்பு விமான சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது - கனேடியத் தூதுவர்


வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  எடுத்து கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது,

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் விரிவாகக் குறிப்பிட்டார்.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்த முறைமை தவறானது என்றும் அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

 இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு கோருகின்றனர். பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளைக் கோரவில்லை. ஆனால்  இங்கு காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும்போது தெற்கில் தவறாக சித்தரிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியின் அவசியம். பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.  பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி, பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பவையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

அதன் போது, பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது. இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள், தமது பயணப் பொதிகளை பேருந்துகளில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டு, கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றனர் என தூதுவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர், அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியகக் கூடியதாக இருந்ததாக குறிப்பிட்டார். 





No comments