குற்றப் புலனாய்வு பிரிவின் உப பரிசோதகர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவில் பணிபுரியும் பொலிஸ் பரிசோதகர் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு நபர்களை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டு வந்த குற்றத்திலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
No comments