Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு


வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் இளம் விவசாய விஞ்ஞானி (Little  Agriculturist Program) போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்களை  கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில், கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் இடம்பெற்றது.

இதில் கல்லூரியின் பழைய மாணவரும் ரட்ணம் பவுண்டேஷன் ஸ்தாபகருமான கலாநிதி ரட்ணம் நித்தியானந்தன்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இத்துடன் விவசாய போதனாசிரியர் ரமேஷ், ஆசிரிய ஆலோசகர்  அருந்தவம், வடமராட்சி களக்கற்கை நிலைய முகாமையாளர் கோகுலராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு, தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தினர்.

குறித்த பாடசாலை மாணவர் ஐவரிற்குமான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments