Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது. கட்டடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நாட்டி வைத்தார்.

இதற்காக வன்னி கோப் எனும் நிறுவனம் குறித்த நிதியினை பங்களிப்பு செய்கிறது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் உரையாற்றும் போது,

 மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும்.

இதைப்போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.

மேலும் சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர். அவ்வாறானதொரு நிலைமையில் இவ்வாறானதொரு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது.

தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும், என ஆளுநர் தெரிவித்தார்.




 

No comments