மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மஸ்கெலியா பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், சந்தேக நபர்களையும் மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 36, 37 மற்றும் 40 வயதுடைய மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments