BBC தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் இயற்கை எய்தினார்.
செய்திகளை உடனுக்கு உடன் அறிய கீழுள்ள இணைப்பின் ஊடாக எமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/ H2g8RmUpm8xDqiZJH11jfN
"ஆனந்தி அக்கா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருமதி ஆனந்தி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார்.
பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசையின் மூத்த அறிவிப்பாளர் ஆவார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் இலங்கை வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்துடன் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதன்பின்னர் 1970களில் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து, பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராக மூத்த தயாரிப்பாளராகவும் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றார்.
No comments