சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும், மத்திய மாகாண அனுமதிகள் பெறுவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பருத்தித்துறை, மருதங்கேணி நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் இந்திய முதலீட்டாளர் குழுவினர் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments