Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடந்த யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - எம்.பிகளின் தர்க்கத்தால் இடையில் நிறுத்தம்


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்   கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய  தினம்செவ்வாய்க்கிழமையாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. 

தேர்தல் ஆணைக்குழு, தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடலில் மார்ச் மாதம் ஒருங்கிணைப்புக்குழு கூட்டததை நடாத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள மட்டும் கலந்துரையாடல், உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான விடயங்களை தவிர்த்தல், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை  தவிர்த்தல் போன்ற விடயங்களை கவனத்தில்  கொள்ளுமாறு யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் கூட்டத்தின் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டதுடன், கூட்டம் ஆரம்பமானது.

கூட்டத்தில், ஒருங்கிணைந்த கிராமிய  நிகழ்ச்சித் திட்டத்திடம் (2025- 2029), கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆகியற்றுக்கான திட்ட முன்மொழிவுகள், பன்முகப்படுத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் ஏனைய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது.

அதேவேளை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்  தலைமையுரையாற்றுகையில், 

அரசாங்கத்தினால் முன்னனெடுக்கப்படும் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ளோம்.

அதற்கு மாகாண, மாவட்ட ரீதியான செயற்திட்டங்கள் தொடர்பாகவும் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள்  தொடர்பாகவும் கலந்துரையாடி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தேவை.

அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை என்றார்.

மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. 

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,  கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வைத்தியர்  சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலாளர்  இ. இளங்கோவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன்,  மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள்  பிரதிநிதிகள்,   திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

அதேவேளை குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும்  அருச்சுனா ஆகியோர் சபை நாகரிமற்ற வகையிலான சொல்லாடலுகளுடன் தர்க்கம் புரிந்த நிலையில் கூட்டம் இடைநடுவில்  இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments