Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம்


நல்லூர் பிரதேச  செயலகமும் தமிழியல் ஆய்வு  நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம் நல்லூர் திருஞானசம்பந்த ஆதீன மண்டபத்தில்  நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் றஜீபன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்  நல்லூர் பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் மற்றும் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆய்வரங்கத்தொடக்கவுரையை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர்  பேராசிரியர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தன்  ஆற்றினார்.

ஆய்வுரைகளில் தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியம் எனும் கருப்பொருளில் யாழ் பல்கலைக்கழக  தகைசார் தமிழ் பேராசிரியர் அ. சண்முகதாஸ் , இலக்கணத்தில் புறப்பொருள் வெண்பா எனும் பதவியலில் தென் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல் துறை முதுநிலை  விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன் , இலக்கணத்தில்  வீரசோழியம் எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்  பேராசிரியர்  கலாநிதி செல்வி  சிவசுப்பிரமணியம் மற்றும் இலக்கணத்தில் நன்னூல்  எனும் விடயப்பரப்பில் முனைவர்  மனோமணி  சண்முகதாஸ், இலக்கண விளக்கம் எனும் தலைப்பில் பேராசிரியர் கலாநிதி   எஸ் சிவலிங்கராஜா தமது ஆய்வுரைகளைச் சமர்ப்பித்தனர்.

 நீண்ட நாடகளின் பின் தகைசார் பேராசிரியர்களால் நிகழ்த்தப்பட்ட இவ்வாய்வரங்கில் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் இலக்கண ஆர்வலர்கள் என பலர் பங்குபற்றி பயன்பெற்றனர்.







No comments