Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் உயிரிழந்துள்ளான் 

உடுவில் பகுதியை சேர்ந்த சுன்னாகம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். 

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின் நோக்கி செலுத்தும் போது , பின் புறமாக நின்ற சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments