சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்கள் தொடர்பான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்கிய நபர் ஒருவர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இது தொடர்பாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், ராகம, கெந்தலியத்த பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசியை பகுப்பாய்வு பிரிவினர் பரிசோதித்த நிலையில் , சந்தேக நபரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய காணொளிகளை மீட்டுள்ளனர்.
தொடர்ந்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments