Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கச்சதீவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை மறுதினம் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள நிலையில் அதன் பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது .

இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

 இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய துணைத் தூதரக அதிகாரி இ. நாகராஜன், இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி சி. எஸ். ரம்மியா, வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப்பணிப்பாளர் கலந்து கொண்டனர்.

No comments