Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னை முக்கோண வலயம்


வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 

இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும்  நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தேங்காய் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது.  ஒருகாலத்தில் இலங்கையில் இருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது  இறக்குமதி செய்யப்படுகிறது. 

அரசுக்கு சொந்தமான தென்னந் தோட்டங்களுக்கு கடந்த  5 ஆண்டுகாலமாக  உரம்  வழங்கப்படவில்லை..

தேங்காய் தோட்டங்களை முறையாக பராமரிக்காமல்,  சிறந்த விளைச்சலை  எதிர்பார்க்க  முடியாது.

சிலாபம் மற்றும்  குருநாகல் பகுதிகளில் உள்ள தெங்கு தோட்டங்களை  முறையாக பராமரிப்பதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில்  தெங்கு பயிர்ச்செய்கைக்கு உரிய காணிகளில் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் துண்டாக்கப்பட்டன. அழிக்கப்பட்டன.

வருடாந்தாம் 3000 மில்லியன்  தேங்காய்களுக்கான  கேள்வி காணப்படுகின்ற நிலையில் கடந்த ஆண்டு 2,754 மில்லியன் தேங்காய்கள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 2,900 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்யவும், 2020  ஆண்டளவில் 4,200  மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என்றார்.

No comments