பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கிக்கான 07 தோட்டாக்கள் மற்றும் LMG தோட்டா ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments