விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.00 - 8.05 மணி வரையில் நடைபெற்றது.
தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் பொது மக்கள் கையளித்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பயிர்களை சேதப்படுத்தும் வன உயிரினங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகள் மற்றும் இலக்கு தலையீடுகளுக்காக சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையாகும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments