Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றவருக்கு 28 வருட சிறை


தபால் திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, கொழும்பு உயர் நீதிமன்றம் 28 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன்,  16ஆயிரம் ரூபாய் தண்டமும்  விதித்துள்ளது.

மீரிகம பகுதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக, மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் சர்வதேச எக்ஸ்பிரஸ் பிரிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி கெமராக்களை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 11,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த அலுவலக உதவியாளர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குப் பதிவு செய்திருந்தது. 

அதன்படி, 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஊழியருக்கு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 7 ஆண்டுகள் வீதம் 4 குற்றச்சாட்டுகளுக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகளுக்கு 5,000 அபராதம் விதித்த நீதிபதி, அபராதம் செலுத்தாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். 

மேலும், மூன்றாவது குற்றச்சாட்டிற்காக 11,000/- ரூபா அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments