யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments