அரசியல் தலையீடுகள், அழுத்தங்கள் காரணமாக தகவல் அறியும் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோர் பதவி விலகியுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தி என்பதனை தாண்டி அவர்களின் கொள்கைகளில் பல மாற்றங்கள் காணப்படுகிறன. சுயாதீன ஆணைக்குழுக்களில் கூட தலையீடு செய்கின்றனர்.
குறிப்பாக பொலிஸ் ஆணைக்குழு , தகவல் அறியும் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும் என கடந்த கடந்த காலங்களில் குரல் கொடுத்தவர்கள் தற்போதுள்ள ஆட்சியாளர்கள்
ஆனால் இன்று அந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் குரல் வளையை எட்டி பிடித்துள்ளனர் தற்போது பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனம் தொடர்பில் பரவலாக செய்திகள் வெளி வருகின்றன. அவர்களின் குரல் வளைகள் எவ்வாறு நசுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் பலரும் அறிந்திருப்பீர்கள்
தற்போது தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் நிர்பந்தத்தின் அடிப்படையில் பதவி விலகியுள்ளார் என அறிய கிடைக்கிறது. விரைவில் அது தொடர்பான செய்திகள் வெளிவரும்
தற்போது மீள்இணைப்புக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
இலங்கையில் மிக சுயாதீனமாக இயங்கியது , இந்த தகவல் அறியும் ஆணைக்குழு , பெரமுனாவின் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே , அவர்கள் மத்தியில் தலையிடவோ கூட இல்லை
சுயாதீன தன்மையையும் மக்களின் மனதையும் வெல்வோம் என கூறி ஆட்சி பீடம் ஏறியவர்கள் இன்று சுயாதீன ஆணைக்குழுவின் குரல் வளைகளை நசிக்கின்றவர்களாக மாறியுள்ளனர்.
இவ்வாறான கீழ் தர அரசியலில் இருந்து ஆட்சியாளர்கள் மீண்டு வர வேண்டும். இவ்வாறான அநியாயங்களுக்கு எதிரான குரலாக என்றைக்கும் பெரமுனா குரல் கொடுக்கும் என தெரிவித்தார்