Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பெரமுனா, சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு விரோதமானவர்கள்


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார் 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சட்டவிரோதமான செயற்படவுகளுக்கு நாங்களும் விரோதமானவர்கள். சட்டவிரோதமான செயற்பாட்டை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். 

தையிட்டி விகாரை பாதுகாப்பு வலயத்தினுள் நடந்த செயல். அதனை நியாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இந்த பிரச்னையை நாங்கள் இன நல்லிணக்கத்துடன் சமூகமாக எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் ஆராய்வோம் 

ஊழல் , சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒத்துப்போக கூடியவர்களாக நாங்கள் இருக்க மாட்டோம். சட்டவிரோதமான கட்டடம் என்றால், அது உடைக்கப்படவே வேண்டும். 

விகாரையில் நில உரிமையாளர்கள் இன்னமும் கூட்டான முடிவொன்றினை எடுக்கவில்லை. சிலர் தமக்கு மாற்று காணி தந்தால் போதும் எனும் நிலையில் உள்ளனர்.

 காணி உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரும் போது . அந்த மக்களுடன் இணைந்து பயணிக்க நாங்கள் தயார் என மேலும் தெரிவித்தார்.

No comments