இலங்கை, தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பத்து இரண்டு பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன், "உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை" கடந்த மாதம் 07ஆம் திகதி அன்று திஸ்ஸஹாராம ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகி, நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரையை சென்றடைந்தனர்.
அதன் போது, கடற்படையின் பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன், இந்த பாத யாத்திரையில் வருகைத்தந்த பிக்குகள் மற்றும் ஏனையவர்களுக்கு தேவையான வசதிகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
இவ் பாதயாத்திரையில் கலந்து கொண்ட பிக்குகளுக்கு பௌத்த சமய முறைப்படி கிலன்பச மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், முதலுதவி உள்ளிட்ட ஏனைய வசதிகளையும் கடற்படையினர் செய்து கொடுத்தனர்.
No comments