ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் ஹெராயினுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றவியல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் 2023.05.12 அன்று அவிசாவளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் இருவரை தாக்கி கடுமையாக காயப்படுத்தியமை, 2023.05.26 அன்று அவிசாவளையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் துப்பாக்கிதாரியாக செயற்பட்டமை, 2023.09.20 அன்று அவிசாவளையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் கோனபல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், கைதின் போது அவரிடம் இருந்து சுமார் 6 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments