வடமாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மாகாணப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி அலுவலர்களால் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள விடயங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வட மாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
No comments