Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனடா நீதி அமைச்சரானார் ஹரி ஆனந்தசங்கரி


கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி ஆவார்.

இலங்கையில் இருந்து தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்ததுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

இந் நிலையில், கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி  ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.

இந்நிலையில் கனடாவின்  24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்றைய தினம் பதவியேற்றார்.

அதனை தொடர்ந்து புதிய அமைச்சரவை  பதவியேற்பின் போது ஹரி அனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் - இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்

No comments