வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போதே சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் யுனிசெப் பிரதிநிதிகளிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments