நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வேலணை மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் கைக்கோடாரி சின்னத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் நேற்றைய தினம் புதன்கிழமை வேலணை மற்றும் உரும்பிராய் தெற்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வில் வேட்பாளர்கள் , ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் வேலணை மற்றும் கோப்பாய் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தமது சுயேட்சை குழுவிற்கு அரசியல் அதிகாரங்களை வழங்குங்கள் என கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் சக கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்தோ , அவர்களின் சுவரொட்டிகள் மீது எமது சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற கீழ் தர அரசியல் செய்யாது, நாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் எதிர்காலத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை உங்கள் பிரதேசங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்பதனை மக்களுக்கு கூறி நேர்மையான முறையில் ஜனநாயக ரீதியாக வாக்குகளை சேகரியுங்கள் என தமது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை தொழிலதிபர் சுலக்சன் அறிவுறுத்தியுள்ளார்.
சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில் சுயேட்சை குழு - 03 இலும் , வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் சுயேட்சை குழு - 2 இலும் கைக்கோடாரி சின்னத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுக்கின்றனர்.
No comments