துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
'அரகலய' போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, கல்கிசை பகுதியில் ரோஹி ங்யா முஸ்லிம்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது தாக்குதல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தியமை, முஸ்லீம்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments