யாழ்ப்பாணம் உரும்பிராய் வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
உரும்பிராய் மேற்கில் உள்ள வைத்தீஸ்வர சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் நான்காம் நாள் நிகழ்வில் பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் மூத்த புதல்வன் அபியுத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
தந்தையின் வழியில் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் , அபியுத் விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சனசமூக நிலையத்திற்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார்.
No comments