நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த செல்வராசா வெற்றிவேல் (வயது 48) என்பவராவர்.
அம்பாறை, இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன மீனவரை தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
No comments