Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, May 21

Pages

Breaking News

சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி


சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60இற்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார். 

கலந்துரையாடலை நடத்த முன்வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது. 

இந்நிலையில் இன்று (16) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.