Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கலைத்துறை சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு


வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர்  நாடாளுமன்றத்துக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்தனர்.

அமைச்சர்களான ஹர்ஷன நாணயக்கார, சரோஜா போல் ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், வைத்தியர் சிறிபவானந்தராஜா மற்றும் ரஜீவன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கலைத்துறைக்கு இந்திய தரப்பின் பங்களிப்பு மற்றும் முதலீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்குமாறு அமைச்சர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்தார்.

கலைதுறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

இது பற்றி இந்திய கலைத்துறையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறும் இதன்போது அமைச்சர்  கோரினார்

No comments