Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்


இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலவும் பாதகமான வானிலை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு நாட்டிற்கு வரவிருந்தது. 

தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. 

இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் என்றும், அதன் பிறகு நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் என்றும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறையைக்கு தீர்வாக அமையுமெனவும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments