வேலணை நேதாஜி கலாமன்றம் நடாத்தி வரும் பௌர்ணமி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
மன்ற தலைவர் சானுஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் மகன் அபியுத் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.
கிராமங்களில் நடைபெறும் பௌர்ணமி நிகழ்வுகள் தொடர்பில் கேள்வியுற்றுள்ளேன். அதனை இன்றைய தினமே நேரில் காண்கிறேன். இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் , இனிவரும் காலங்களிலும் இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
No comments