Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும்


எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். 

 யாழ் ஊடக மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தங்களுடைய பொய்களூம் புரட்டுக்களையும் எமது மக்கள் புரிந்து விட்டமையினால்,  தங்களுடைய உழறல்களும் கோமாளித்தனங்களும் எமது மக்கள் எரிச்சலடைய தொடங்கி விட்டமையினால்  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லாது போய் விட்டது என்பதை புரிந்து கொண்டவர்கள் எமக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எமது மக்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்த மண் எங்களின் மண். இதனை நாமே ஆள வேண்டும் என்பதற்காக அளப்பரிய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன.

இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான  முதலாவது பெண் போராளியான ஷோபா இன்றைய நாளிலேயே தன்னுடைய உயிரரை தியாகம் செய்திருந்தார்.

எந்த அமைப்பின் ஊடாக அந்த தியாகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை மதிக்கப்பட வேண்டும். வீண் போகக்கூடாது என்பதை மனதில் வைத்து உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments